5 மணி நேரத்தில் ஏற்படும் அற்புதம்: இந்த டீயில் அப்படி என்ன உள்ளது?

Report Print Printha in உணவு

அன்றாட உணவில் இஞ்சியை சேர்த்து வந்தால், உடலில் பல்வேறு பிரச்சனைகளை தடுக்கலாம்.

இஞ்சியை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதிலும் இஞ்சியில் மசாலா இஞ்சி டீ செய்து குடிப்பதால், 5 மணி நேரத்தில் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் இதோ!

தேவையான பொருட்கள்
  • இஞ்சி - 1 சிறிய துண்டு
  • எலுமிச்சை - 1
  • பட்டை - 2 துண்டுகள்
  • புதினா - சிறிதளவு
  • தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, கொதிக்க வைத்து, அதில் இஞ்சி, பட்டை, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

இஞ்சி டீ குடித்ததும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
  • இஞ்சி குடித்த 3 மணி நேரத்தில் வயிற்றில் ஒருவித எரிச்சலுணர்வை சந்திக்கக்கூடும். ஏனெனில் அது வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றி சுத்தம் செய்தவதன் அறிகுறியாகும்.
  • இஞ்சி டீ குடித்த அடுத்த 2 மணி நேரத்தில் உடல் லேசானது போன்ற உணர்வு ஏற்படும். ஏனெனில் அது உடலின் வெப்பநிலையை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • இஞ்சியில் அடிக்கடி டீ அல்லது ஜூஸ் செய்து குடித்து வந்தால், நமது உடலின் ஆரோக்கியத்தை தாக்கும் அனைத்து வகையான புற்றுநோய்களை வராமல் தடுக்கச் செய்கிறது.
  • இஞ்சி டீயை முக்கியமாக பெண்கள் அடிக்கடி குடித்து வந்தால், அது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments