மஞ்சள் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடுங்கள்: இந்த அற்புதம் நிச்சயம் நடக்கும்

Report Print Printha in உணவு

மஞ்சள் பொடி மற்றும் மிளகுத் தூளை தேனுடன் கலந்து சாப்பிட்டால், ஏராளமான உடல்நல பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.

ஏனெனில் இந்த கலவையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள்
  • சுத்தமான மலைத் தேன் - 100 கிராம்
  • மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகுத் தூள் - 1 சிட்டிகை
  • எலுமிச்சை தோல் - 1 டீஸ்பூன்
  • ஆப்பிள் சீடர் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் பொடி, மிளகுத் தூள் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் எலுமிச்சை தோல் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு அதை நன்கு மூடி, 2 வாரம் ஃப்ரிட்ஜில் வைத்து, அதன்பின் பயன்படுத்த வேண்டும்.

குடிக்கும் முறை

சளி, காய்ச்சல் போன்றவை அதிகமாக இருந்தால், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என்று தொடர்ந்து மூன்று நாட்களும் 1/2 டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.

நன்மைகள்
  • தினமும் இதில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், அடிக்கடி உடலினுள் ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
  • சுவாசப் பிரச்சனைகளான ஆஸ்துமா, நுரையீரல், மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், தினமும் மூன்று வேளை இந்த கலவையில் 1/2 டீஸ்பூன் சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • மஞ்சளை உணவு சாப்பிடுவதற்கு முன் எடுத்துக் கொள்வதால், தொண்டை மற்றும் நுரையீரலுக்கு நல்லது. அதுவே சாப்பிடும் போது எடுத்தால், செரிமான மண்டலத்திற்கும், உணவு சாப்பிட்ட பின் எடுத்தால், குடல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.
குறிப்பு

பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை எடுக்கக் கூடாது. ஏனெனில் அது பித்தப்பை தசைகளைச் சுருங்கச் செய்து, குறைவான ரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments