இந்த உணவுகளில் ஆபத்து உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

Report Print Printha in உணவு

அன்றாடம் நாம் ஆரோக்கியம் என்று நினைத்து சாப்பிடும் சில உணவுகளில் அதிகமாக சேர்க்கப்படும் சில இரசாயனக் கலவைகள் மூலம் ஆபத்து ஏற்படுகிறது.

ஒருசில உணவு வகைகளில் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான புரோபயாடிக் செயற்கையான முறையில் சேர்ப்பதால், அவை நமது உடலில் எதிர்மறை தாக்கங்களை உண்டாக்குகிறது.

சர்க்கரை

புரோபயாடிக் உணவுகளுடன் சர்க்கரை சேர்த்து உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

உலர் பழங்கள்

உலர் பழங்களில் அதிகமாக இரசாயன புரோபயாடிக் கலவை கலக்கப்படுகிறது. எனவே இந்த உணவை தவிர்த்தால், அதிகப்படியான உடல் எடை ஏற்படுவது தடுக்கப்படும்.

பேக்கிங் உணவு

பேக்கிங் செய்த உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவ்வகையான புரோபயாடிக் கலவை உள்ள உணவுகள் மிக குறைந்த ஆரோக்கிய நன்மைகளே உள்ளது.

ஜூஸ்

புரோபயாடிக் கலவை கொண்ட சர்க்கரையை பழ ஜூஸில் சேர்த்து குடிப்பதால், அந்த பழத்தில் உள்ள சத்துக்கள் கிடைக்காமல் போகிறது. எனவே ஜூஸில் சர்க்கரை சேர்ப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

புரோட்டின் பவுடர்

புரோட்டின் பவுடருடன் புரோபயாடிக் சேர்த்து தினமும் சாப்பிடுவது ஒரு தவறான கலவை ஆகும். இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கை ஏற்படுத்துகிறது.

ஐஸ்க்ரீம்

ஐஸ் க்ரீம்களில் புரோபயாடிக் கலவை அதிகமாக சேர்க்கப்படுவதால், அதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லது என்பார்கள். ஆனால், சந்தையில் புரோபயாடிக் டார்க் சாக்லேட் என்று விற்கப்படுகின்றது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.

கிரனோலா பார்

இந்த கிரனோலா பாரில் பத்து கிராம் சர்க்கரை மற்றும் இரண்டு கிராம் நார்ச்சத்து இருக்கும். எனவே இந்த உணவை உடல் எடை குறைக்க தேர்வு செய்வது மிகவும் தவறானது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments