உருளைக்கிழங்கை பச்சையாக சாறு எடுத்து குடித்தால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்!

Report Print Printha in உணவு

உருளைக்கிழங்கு பிடிக்காது என்று கூறுபவர்கள் இவ்வுலகில் யாருமே இருக்க மாட்டார்கள்.

பெரும்பாலோனோர் உருளைக்கிழங்கை வறுத்தும், அவித்தும் சாப்பிடுவதை தான் அதிகமாக விரும்புவார்கள்.

ஆனால் அந்த உருளைக் கிழங்கை பச்சையாக சாறு எடுத்து குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

உருளைக்கிழங்கின் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • ஆர்த்ரைடிஸ் காரணமாக மூட்டு இணைப்புகளில் ஏற்படும் வலி மற்றும் கழுத்து, தோள்பட்டைகளில் உண்டாகும் வலிகயைக் குறைக்கிறது.
  • உருளைக் கிழங்கை சாறு எடுத்து குடிப்பதால், நமது உடம்பில் அமிலத்தன்மை குறைந்து, சமநிலை அடைவதுடன், அதனால் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் நோய்களை தடுக்கிறது.
  • நமது சருமத்தில் தொற்றுக்களினால் ஏற்படும் அலர்ஜி, தேமல், படை போன்றவை இருக்கும் இடத்தில் உருளைக்கிழங்கு சாறை தினமும் தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • நமது கால் கட்டை விரல்களில் யூரிக் அமிலமானது, உப்பாக மூட்டுகளின் இணைப்பில் தங்கி வலியை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக உருளைக் கிழங்கு சாறு உள்ளது. மேலும் இந்த சாறை தினமும் குடித்து வந்தால், அது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • தினமும் உருளைக் கிழங்கின் சாறை எடுத்துக் குடித்து வந்தால், அது நமது உடலில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் நச்சுக்களை தேங்க விடாமல் தடுக்கிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments