கொலஸ்ட்ராலைக் குறைத்து ரத்தத்தை சுத்தமாக்கும் அற்புதமான ஜூஸ்!

Report Print Printha in உணவு

பூமியில் விளையும் ஒவ்வொரு உணவு வகைகளிலும் பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

அத்தகைய உணவு வகையில் ஒன்றான பசலைக் கீரை மற்றும் பீச் பழத்தை ஒன்றாகச் சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்!

தேவையான பொருட்கள்
  • பீச் - 1
  • பசலைக்கீரை - 1 கப்
  • சுடுநீர் - 1 கப்
செய்முறை

கீரை மற்றும் பீச் பழத்தை நன்கு கழுவி, பீச் பழத்தின் விதைகளை நீக்க வேண்டும்.

பின் இரண்டையும் நன்றாக ஜூஸ் பதத்தில் அரைத்து, சிறிதளவு நீர் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமான சுவையான ஜூஸ் தயார்.

இந்த ஜூஸில் விட்டமின் A, B, B1, B2, C, E, J மற்றும் K போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

நன்மைகள்
  • அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
  • ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, அதை சுத்திகரித்து, ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
  • நம்முடைய இதயம், கணையம், கல்லீரல் ஆகிய உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • செரிமானத்தை சீராக்கி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.
குறிப்பு

பசலைக் கீரை மற்றும் பீச் பழத்தினைக் கொண்டு தயாரிக்கும் ஜூஸில் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments