ரத்தக் கொதிப்பை குறைக்கும் அருமையான தேநீர்!

Report Print Printha in உணவு

நமது உடம்பில் இருக்கும் சோடியத்தின் அளவு அதிகரிக்கும் போது, கெட்ட கொழுப்பின் அளவும் அதிகரிக்கிறது.

இதனால் நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் அழுத்தம் அதிகமாகி, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு ரத்தக் கொதிப்பு பிரச்சனைகள் உண்டாகிறது.

இந்த ரத்தக் கொதிப்பு பிரச்சனைகள் மூலம் நம்மை முதலில் பாதிப்பது இதயம் என்பதால் நாம் இந்த பிரச்சனையை சாதரணமாக நினைக்கக் கூடாது.

எனவே இயற்கையான முறையில் ரத்தக் கொதிப்பு பிரச்சனையை சரி செய்வதற்கு, மருத்துவ தன்மை அதிகம் வாய்ந்த செம்பருத்தி பயனளிக்கிறது.

தேவையான பொருட்கள்
  • நீர் - 4 கப்
  • செம்பருத்தி இதழ் காய்ந்தது - 3
  • செம்பருத்தி இதழ் புதிதானது - 2
  • சர்க்கரை - 1 ஸ்பூன்
  • ஆரஞ்சு - 1
  • பட்டை - 1
செய்முறை

முதலில் 4 கப் நீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் பட்டை மற்றும் செம்பருத்தி இதழ்களை போட்டு மீண்டும் 20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி அதில் சர்க்கரை மற்றும் ஒரு முழு ஆரஞ்சின் சாறை கலந்து சூடாகவோ அல்லது ஐஸ்கட்டி கலந்தோ குடிக்கலாம்.

நன்மைகள்
  • மருத்துவ குணங்கள் அதிகமாக கொண்டுள்ள செம்பருத்திப் பூ சித்த மருத்துவத்தில் சிறந்ததாக பயன்படுத்தப்படுகிறது.
  • செம்பருத்தியின் இலை, பூ, வேர் என்று அதன் அனைத்து பாகங்களுமே மருத்துவத் தன்மையைக் கொண்டுள்ளது.
  • செம்பருத்தியில் தயாரித்த இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்ட இந்த தேநீரை குடித்தால், நமது உடம்பின் ரத்தோட்டம் சீராக்கப்பட்டு, ரத்தக் கொதிப்பு பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments