வயிற்றுக்கு கெடுதல் உண்டாக்கும் உணவுகள் எவை தெரியுமா?

Report Print Arbin Arbin in உணவு

வயிற்றுப் போக்கிற்கு கிருமிகள் மட்டும் காரணம் என்று நினைக்கிறீர்கள். இல்லை. சில உணவுகளும் உங்களின் வயிற்றுப் போக்கிற்கு காரணமாகும்.

மாற்றுச் சர்க்கரை: குளுகோஸிற்கு பதிலாக பயன்படுத்தும் செயற்கை இனிப்புகள் சுக்ரோஸ், சார்பிடால் கலந்த இனிப்பு வகைகள் உங்கள் குடலில் அதிக நெகிழ்வுத்தன்மையை உண்டாக்கிவிடும். இதனால் வயிற்றுப் போக்கு உண்டாகக் கூடும்.

காஃபி: சிலர் காஃபி குடித்ததும் டாய்லெட்டிற்கு போவதை கவனித்திருக்கிறீர்களா? இதர்கு காரணம் காஃபைன் குடலில் இறுக்கத்தை அதிகம் உண்டாக்குகிறது. இதனால் வயிற்றுப் போக்கு உண்டாகும். அடிக்கடி காஃபி குடித்தால் மலச்சிக்கலை இலகுவாக்காது. மாறாக வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.

மது: மது உங்கள் குடல்களில் எரிச்சலை உண்டாக்கும். இது ஜீரண மண்டலத்தை மிகவும் துரிதப்படுத்துகிறது. இது உடலுக்கு நலதில்லை. ஆகவேதான் வயதனவர்களுக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு வருவதற்கு மதுவும் காரணமாகும்.

பால் பொருட்கள்: உங்களுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உன்ணும்போது வயிற்றுப் போக்கு உண்டாகும்.

கோதுமை மற்றும் பார்லி உணவுகள்: கோதுமையிலுள்ள குளுடன் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். அது ஒரு வகை புரதமாகும். இது உடலில் ஒவ்வாமையை உண்டாக்கி வயிற்றுப் போக்கை உண்டு பண்ணிவிடும்.

நார்சத்து உணவுகள்: நார்சத்து உணவுகள் நல்லதுதான். ஆனால் அளவுக்கு மீறிய நார்சத்து கொண்ட உணவுகள் குடல்களில் அதிக நெகிழ்வுத்தன்மையை உண்டாகி வயிற்றுப் போக்கை தந்துவிடும். உங்களுக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கலாம்.

துரித உணவுகள்: துரித உணவுகளில் இருக்கும் கொழுப்பு எளிதில் ஜீரணிக்க முடியாதுதான். அதே சமயம் அவற்றின் பசைத்தன்மை குடல்களில் ஒட்டிக் கொண்டு எதிரியாக மாறிவிடும். இதனை தொடர்ந்து ஒவ்வாமை வயிற்றுப் போக்கு உண்டாகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments