இத படிச்ச பின்னர் சோள நாரை தூக்கிப் போடவே மாட்டீங்க

Report Print Printha in உணவு

சோளக்கருதில் இருக்கும் பட்டு போன்ற நாரை நாம் அனைவருமே தூக்கி வீசிவிடுவோம்.

ஆனால் சோளக்கருதின் நாரில் ஏராளமான சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்துக் காணப்படுகிறது.

சோள நாரில் புரோட்டின், மினரல், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து போன்றவை அதிகமாக உள்ளது.

சோளக்கருதின் நாரில் கிடைக்கும் நன்மைகள்
  • சோளக்கருதின் நாரில் ஒருவித ரசாயனம் இருப்பதால், இது நமது உடம்பின் சிறுநீரை அதிகப்படுத்தி, காயம் மற்றும் வீக்கங்களை குறைக்கிறது.
  • சோளநாரில் அதிகமாக விட்டமின் K அதிகமாக உள்ளதால், நமது உடம்பில் ஏற்படும் காயங்களின் ரத்தப் போக்கை கட்டுப்படுத்தி, ரத்தத்தை உறையச் செய்கிறது.
  • சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்க சோள நார் உதவுகிறது. மேலும் இது மாதிரியான சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கிறது.
  • நமது உடலில் உண்டாகும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் பிரச்சனையை இந்த சோள நார் ஒழுங்குபடுத்தி, அந்த கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு அனுப்பி ஜீரணமாக்குகிறது.
  • சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் பல பிரச்சனைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். ஏனெனில் இது இன்சுலின் ஹார்மோனை தூண்டச் செய்து, சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகரிக்காமல் தடுக்கிறது.
  • 2 கப் நீரில் 2 ஸ்பூன் சோளக்கருது நாரை கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, பின் அதனை குடித்து வந்தால் இதய பிரச்சனைகள் ஏற்படாது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments