அரிசி கழுவிய தண்ணீரில் இத்தனை பயன்களா?

Report Print Santhan in உணவு

சாதரணமாக அனைவரின் வீட்டிலும் உணவு சமைக்கும் போது அரிசியை கழுவி தான் சமைப்பார்கள்.

அரிசி கழுவிய நீரை கீழே ஊற்றிவிடுவோம், அதன் பயன் தெரியுமா உங்களுக்கு?

அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்பு செய்யலாம். சமையலில் இதனை பயன்படுத்துவதால் சுவை கூடுதலாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

இதனை சூடுபண்ணி அந்த தண்ணீரை கொண்டு குழந்தைகளின் கால்களை பிடித்து ஊற்றவும். உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும்.

இதனால் விரைவாக கால்களுக்கு பலம் கிடைத்து குழந்தைகள் நடக்கும். அவை இன்றும் கிராமபுறங்களில் பின்பற்றி வருகின்றனர்.

அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அந்த நீரை வடிகட்டவேண்டும். வடிகட்டிய நீரால் முகத்தையும், கூந்தலையும் அலச வேண்டும்.

இதிலுள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொலிவு பெரும்.

மேலும் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிப்பதுடன், முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.

இதனை அப்படியே குடிக்காமல், அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும்போது சத்துக்கள் வீணாகாமல் முழுமையாக கிடைக்கும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments