சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

Report Print Fathima Fathima in உணவு

குடுவை போன்று இருக்கும் சுரைக்காயானது நம் உடம்பில் உள்ள உறுப்பான கர்ப்பப்பை வடிவத்தில் காணப்படுவதுடன் நிஜத்திலும் கர்ப்பப்பைக்கு வலிமை சேர்க்க கூடியதாக உள்ளது.

இந்த சுரைக்காயில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் B போன்ற பல சத்துக்கள் உள்ளன.

அதிக நீர்ச்சத்துக் கொண்ட இந்த சுரைக்காயை ஜூஸ் செய்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் என்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

செய்முறை

சுரைக்காயை தோல் நீக்கி துண்டுகளாக்கி ஒரு டம்ளர் நீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

இதனை வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

பயன்கள்

  • இதிலுள்ள சத்துக்கள் ஜீரண சக்தி அதிகரிப்பதுடன் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
  • அதிக நீர்ச்சத்து கொண்டதால், கொழுப்புகளை குறைத்து வளர்சிதை மாற்றத்தை தருகிறது.
  • சிறுநீர் பாதை மற்றும் சிறுநீரகத்தில் உண்டாகும் தொற்றுக் கிருமிகளை வெளியேற்றுகிறது.
  • ரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்திற்கும் வழிவகுக்கிறது.
  • கருவளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருப்பதால், கர்ப்பிணிகளும் தாராளமாக சாப்பிடலாம், எனினும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.
  • அல்சர் வராமல் தடுப்பதுடன் கல்லீரல் பிரச்னைகளையும் சரிசெய்கிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments