ஏழு நாட்கள் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் மாற்றங்கள்!

Report Print Fathima Fathima in உணவு
ஏழு நாட்கள் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் மாற்றங்கள்!
1647Shares

தேங்காய் தண்ணீர் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாணங்களில் ஒன்றாகும்.

தேங்காய் தண்ணீர் சுவையாக இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அவற்றின் பலன்கள் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவற்றை 7 நாள் தொடர்ந்து குடித்தால் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை காணலாம்.

தேங்காய் தண்ணீரை குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, சிறுநீர் பாதைகள் மற்றும் ஈறு நோய்களை ஏற்படுத்தும் பக்டீரியாக்களை அழித்து விடும்.

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து விடும்.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்.

இதில் நார்ச்சத்து வளமாக இருப்பதால் வாய்வு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

உடல் எடை குறக்க விரும்புபவர்களும் இதனை குடித்தால் பசி கட்டுபட்டு உடல் எடை குறைக்க முடியும்.

மேலும், இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு மறுநாள் காலை எழும்பும் போது தலைவழியை உணரும் போது இந்த தண்ணீரை குடித்தால் , தலைவலி நீங்கிவிடும், மதுவினால் ஏற்பட்ட உடல் வறட்சி தடுக்கப்பட்டு உடல் பொலிவான தோற்றத்தை பெறும்.

கர்ப்பிணி பெண்கள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments