அழகான தொடையை பெற இந்த ஒரு பயிற்சியை செய்தாலே போதுமே!

Report Print Kavitha in உடற்பயிற்சி

பொதுவாக சில பெண்களுக்கு தொடை பகுதிகளில் சதை நிறைந்து பார்க்க அசிங்கமாக காணப்படும்.

இதனை குறைக்க பலர் ஜிம்களுக்கே செல்வது வழக்கம். இருப்பினும் நாம் வீட்டில் இருந்து செய்யும் சில பயிற்சிகள் கூட தொடைப்பகுதியில் காணப்படும் அதிகப்படியான சதையை குறைக்க முடியும்.

அதில் லையிங் சைடு லெக் ரைஸ் (Lying Side Leg Raise exercise) என்று அழைக்கப்படும் பயிற்சி பெரிதும் உதவி புரிகின்றது. இப்பயிற்சியை வீட்டில் இருந்து கூட செய்யலாம்.

அந்தவகையில் தற்போது இந்தபயிற்சியை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

Image Source: POPSUGAR Photography

  • முதலில் தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக்கொள்ள வேண்டும்.

  • இடது கையை முட்டிவரை மடித்து, வலது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும். வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும்.

  • இடது காலை மட்டும் மேலே உயர்த்தி, ஐந்து விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். பின்னர், படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

  • இதேபோல 15 முறை செய்துவிட்டு, இடது பக்கத்துக்கும் செய்ய வேண்டும். நன்கு பழகிய பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

பயன்கள்

  • தொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடையும்.

  • பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகும்.

  • தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்