தொப்பையை மிக விரைவில் குறைக்க இதை செஞ்சா போதும்!

Report Print Nalini in உடற்பயிற்சி
626Shares

நம் மக்கள் தொப்பையை குறைக்க வேண்டும் என்று விதவிதமாக முயன்று செய்வார்கள்.

இந்நிலையில் தொப்பையை குறைக்க ஒர் வழி…. இது மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க கூடாது.

கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் ஆனால் நிரந்தர பலன் உங்களுக்கு கிடைக்கக்கூடும். இப்படி செய்தால் ஒரே இரவில் நல்ல மாற்றத்தினை உணரலாம்.

உடற்பயிற்சி

தொப்பையை குறைக்க வேண்டும், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று சொன்னாலே சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து விட வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகள் தொடவே கூடாது, ப்ரோட்டீன் உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லலாம்.

அதோடு பல உணவுப்பட்டியல், விதவிதமான டயட் முறைகளும் கடைபிடிக்கின்றனர். இவற்றைத் தாண்டி உணவுகளை விட முக்கியமான ஒரு விஷயம் இங்கே இருக்கிறது அவை உடற்பயிற்சி.

தினமும் அரை மணி நேரம் இதைச் செய்தால் கூட போதும் சிறந்த பலன் உங்களுக்கு கிடைத்து விடும்.

லுங் ட்விஸ்ட்

இந்த உடற்பயிற்சி மிகவும் எளிமையானது. முதலில் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். ஒரு காலை மட்டும் முன்னோக்கி எடுத்து வைத்து மடக்கி உட்கார வேண்டும். இதன் போது அடுத்தக் கால் பின்னோக்கி செல்ல வேண்டும். அதன் பின் மடக்கிய காலை நிமிர்த்தி நார்மல் பொசிசனில் நிற்க வேண்டும். இரண்டு கால்களுக்கு மாறி மாறி இது போல செய்யணும். ஆரம்பத்தில் இதை மட்டும் செய்திடுங்கள் அதன் பின்னர் காலை மடக்கி உட்காருகிற சமயத்தில் உங்களின் மேல் உடலையும் ஒரு பக்கமாக திருப்ப வேண்டும். வலது காலை மடக்கியிருக்கிறீர்கள் என்றால் உங்கள் உடலை வலது பக்கம் திருப்ப வேண்டும்.

பைசைக்கிள் க்ரன்சஸ்

  • இது மிகவும் எளிமையானது தான். தரையில் படுத்துக் கொள்ளுங்கள். காலை நேராக நீட்டியிருக்க வேண்டும் தரையிலிருந்து சற்று உயர்ந்த நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது உங்களது இரண்டு கைகளும் தலைக்கு பின்புறம் பிடித்திருக்க ஒரு காலை மட்டும் மடக்க வேண்டும். ஒரு காலை மடக்கும் போது இன்னொரு கால் தரையில் இருக்காமல் சற்று உயரமாக அந்தரத்தில் நிற்க வேண்டும்.
  • அடுத்து மடக்கிய காலை நீட்டவும் நீண்டிருந்த காலை மடக்க வேண்டும். ஆரம்பத்தில் காலை மட்டும் மாறி மாறி மடக்கி வாருங்கள். அதன் பின்னர் மடக்குகிற முட்டி உங்கள் முகத்தில் படுமாறு உங்களது மேல் உடம்பையும் உயர்த்த வேண்டும். இந்தப் பயிற்சி தொடர்ந்து செய்பவர்களுக்கு மட்டுமே வரும்.

ரிவர்ஸ் க்ரன்சஸ்

  • மேற்சொன்ன க்ரன்சஸ் செய்தது போலவே தான் இதுவும். ஆனால் இங்கே மேல் உடலை தூக்கும் அதே நேரத்தில் உங்களது கால் முட்டியையும் தூக்க வேண்டும் ஒவ்வொரு முறையும் கால்முட்டியும் உங்கள் முகமும் சேருமாறு உடலை சுருக்கி விரிக்க வேண்டும். இதன் பெயர் ரிவர்ஸ் க்ரன்சஸ்

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்