தலைவலியை விரட்டியடிக்க இதை ட்ரை பண்ணுங்க?

Report Print Nalini in உடற்பயிற்சி
365Shares

நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளுள் தலைவலியும் ஒன்று.

தலைவலி வந்துவிட்டாலே போதும் நம்மை எந்த வேலையையும் செய்யவிடமால் பாடாய்படுத்தி விடும்.

இதிலிருந்து விடுபட யோகசானங்கள் உதவி செய்யும். அதில் உத்தானபாத ஆசனம் அஜீரண கோளாறினாலும், மலச்சிக்கலினாலும் வரும் தலைவலி நீக்கி விடும்.

அந்தவகையில் தற்போது இந்த ஆசனத்தை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

  • விரிப்பில் நேராக படுக்கவும். இரு கால்களை சேர்க்க வேண்டும்.
  • கைகளை விரல்கள் குப்புறப்படுமாறு பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைக்க வேண்டும்.
  • மூச்சை உள் இழுத்துக் கொண்டே இரு கால்களையும் சாதாரண நிலையில் தரையிலிருந்து அரை அடி மட்டும் உயர்த்த வேண்டும்.
  • மூச்சை அடக்கி பத்துவிநாடிகள் இருக்கவும் பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு கால்களை மெதுவாக இறக்க வேண்டும்.
  • ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்ய வேண்டும்.
  • இதன் பலன்கள் ஜீரண உறுப்புகள் இறுக்கம் பெற்று நன்கு வேலை செய்ய வேண்டும்.
  • உச்சி முதல் பாதம் வரையிலுள்ள அத்தனை நாடி நரம்புகளும் நன்றாகத் தூண்டப்பெற்று சிறப்பாக செயல்படும்.
  • வாயு தொந்தரவு நீங்கி விடும். அஜீரண கோளாறினாலும், மலச்சிக்கலினாலும் வரும் தலைவலி நீக்க இது ஒரு நல்ல ஆசனமாகும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்