தசைகள், எலும்புகள் பலவீனமடைவதை தடுக்கணுமா? இந்த உடற்பயிற்சியை செய்திடுங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

வயதாக வயதாக நமது எலும்புகள் பலவீனமடைந்து நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.

இதற்கு காரணம் உடற்பயிற்சியின்மை தான். உடற்பயிற்சியை தவிர்த்தால் எலும்புகளும் தசைகளும் எளிதில் பாதிப்படைந்து விடுகின்றது.

உடற்பயிற்சி செய்ய நேரமே இல்லை என்றால் கூட நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையையே ஒரு உடற்பயிற்சி போல் செய்யுங்கள்.

அந்தவகையில் தசைகள், எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க உதவும் உடற்பயிற்சி என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • பழு தூக்குதல், பயிற்சி கருவிகள் பயன்படுத்துதல் இதற்கு உதவும். வாரம் 3 முதல் 4 முறை அரை மணி நேரம் இத்தகைய பயிற்சிகளுக்கு ஒதுக்கலாம். இத்தகைய தசைப்பயிற்சிகளுக்கு பின் தரமான புரத உணவு பானங்கள் அருந்துவது தசைகள் வலுவடைய சிறப்பாக உதவும்.
  • உடற்பயிற்சியின் போதும் அதன் பின்னும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
  • தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் கை, கால் தசைகளை மெதுவாக நீட்டி மடக்கி பயிற்சி செய்வது நல்லது.
  • மூச்சை ஆழமாக இழுத்தும் மூச்சுப்பயிற்சி செய்யலாம். ஒவ்வொரு நிலையிலும் பத்து செகண்டுகள் அப்படியே வைத்திருக்கவும்.
  • லிஃப்ட் இருந்தாலும் மாடிப்படி ஏறி செல்லலாம்.
  • வேலை இடைவேளையில் ஒரு பொடி நடை பழகுதல் வேண்டும்.
  • கடை கண்ணிக்கு போக சைக்கிள் பயன்படுத்துங்கள்
  • வாகனத்தை முடிந்த அளவு தவிர்த்து நடக்க உதவும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
  • வீட்டை சுத்தப்படுத்துவது, காரை சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளில் ஆர்வமாய் ஈடுபடுங்கள்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்