தொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கனுமா? இதோ எளிய பயிற்சி

Report Print Kavitha in உடற்பயிற்சி
230Shares

பொதுவாக சில பெண்கள் தொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்க முடியமால் பெரும் அவதிப்படுவதுண்டு.

இதற்காக பெரிதும் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுவதுண்டு.

இதனை தவரித்து தொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்க வீட்டில் இருந்து கூட எளிய பயிற்சி மூலம் குறைக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

பயிற்சி

முதலில் விரிப்பில் நேராக நின்று, நடப்பது போல ஒரு காலை முன்பக்கமாவும் மற்றொரு காலை பின்பக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது முன்பக்க காலை மடித்து நிற்பது போல் வைத்துக் கொண்டு, பின்பக்க கால் முட்டியை தரையை நோக்கி (ஆனால் தரையில் படக்கூடாது) கொண்டு வர வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.

இது போல் மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இதே போல இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும்.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். தினமும் வீட்டில் இருந்தபடியே 20 நிமிடம் பயிற்சி செய்தால் போதுமானது.

பயன்கள்

முன்பக்க தொடை மற்றும் பின்பக்கம், இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, ஃபிட்டாக்கும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்