பொதுவாக சில பெண்களுக்கு தங்களது கைகள் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக தோற்றமளிக்கும்.
இதற்கு கடினமான உடற்பயிற்சிகள் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்து கூட எளிய உடற்பயிற்சிகளை செய்ய முடியும்.
தற்போது அந்த உடற்பயிற்சியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
- முதலில் படத்தில் காட்டியவாறு கைகளின் பின்புறம் வலுவடைய ட்ரைசெப்ஸ் டிப்ஸ் முறையை கையாளலாம்.
- நாற்காலியின் நுனியில் இரண்டு கைகளையும் வைத்து அழுத்தி, உங்கள் கால்களை நாற்காலியில் இருந்து சற்று தள்ளி தரையில் படும் படி நீட்டிக் கொள்ளுங்கள்.
- கால்களை நேராக நீட்டி நாற்காலியை விட்டு விலகி வைத்து, உடலின் மொத்த எடையையும் கைகளில் ஏத்திடுங்கள்.
- பின் மெதுவாக உடலை நேராக இறக்கி முழங்கை 90 டிகிரி திரும்பும்படி செய்யுங்கள்.
- இப்போது கைகளின் பின்புற தசைகளை அழுத்தி, மீண்டும் உடலை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள்.
- முதலில் பாதங்களை தரையில் நேராக வைத்து, முட்டி மடங்கிய நிலையில் இருக்க வேண்டும்.
- ஆனால் ப்ராக்டிஸ் செய்து உடலின் மேல் பகுதிக்கு வலு சேர்க்கும் போது, கால்களை விரித்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து 15 முதல் 20 முறை செய்யலாம்.