சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரையுள்ள பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டுமா? இந்த பயிற்சியை செய்திடுங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

சர்க்கரை நோயாளிகள் கட்டயாம் தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகசனம் செய்வது அன்றாட வாழ்வில் முக்கியமானதாகும்.

அந்தவகையில் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்க செய்ய “சுப்த மச்சேந்திராசனம்” என அழைக்கப்படும் ஆசனம் உதவி புரிகின்றது.

இந்த ஆசனம் சக்கரை நோயாளிக்கு உகந்த பயிற்சி ஆகும். தற்போது அந்த பயிற்சியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

செய்முறை

விரிப்பில் இரண்டு கால்களையும் நீட்டி மல்லாக்கப்படுக்க வேண்டும். வலது காலை மட்டும் மடக்கி நெஞ்சுக்கு நேராக (இடதுபுறமாக) நீட்ட வேண்டும்.

அதன் பிறகு வலது காலை இடது கையால் பிடிக்க வேண்டும்.

அதே வேளையில் வலது கையை நேராக நீட்டி வைக்கவும். தலையை வலதுபுறமாக சாய்க்க வேண்டும்.

இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவேண்டும். பின்னர் கால்களை மாற்றி செய்ய வேண்டும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

இந்த ஆசனம் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்க செய்யும். அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஆசனம் உகந்தது.

மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கும். சிறுநீரகப்பிரச்சனைகளையும் சரி செய்ய உதவும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்