இனப்பெருக்க உறுப்பிற்கு வலிமை பெற வேண்டுமா? அப்போ தினமும் இந்த பயிற்சியினை செய்து வாருங்கள்

Report Print Kavitha in உடற்பயிற்சி

இனப்பெருக்க உறுப்பிற்கு வலிமை பெற எத்தனையோ பயிற்சிகள் யோகவில் இருந்தாலும் சில பயிற்சிகளை தான் முழுப்பயனை பெற்றுத்தரும்.

இதில் ஒன்று தான் கர்ணபிதாசனா. இந்த ஆசனம் பார்ப்பதற்கு கஷ்டமானதாகதான் தெரியும்

இருப்பினும் ஆசனத்தினை செய்வதன் மூலம் இனப்பெருக்க உறுப்புகள் தூண்டப்பட்டு, மசாஜ் செய்வது போன்ற உணர்வு காணப்படும்.

தற்போது இந்த ஆசன பயிற்சியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

செய்முறை

முதலில் படத்தில் காட்டியவாறு இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் படுத்து கொள்ளுங்கள்.

அதன் பின் கைகளால் உடலை மேலே தூக்கி, கால்கள் தலைக்கு பின்னால் தரையை தொடுமாறும், பின் கைகள் தரையில் ஊன்றியிருக்குமாறும் செய்ய வேண்டும்.

இப்படி செய்யும் போது மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.

பலன்கள்

இந்த ஆசன பயிற்சியை செய்வதனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள், இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலனைக் காணலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...