பின்னழகை அதிகரிக்க வேண்டுமா? இதோ எளிய உடற்பயிற்சி

Report Print Kavitha in உடற்பயிற்சி

பொதுவாக சில பெண்களுக்கு பின்னழகு கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

ஆனால் இதற்கு கூச்சப்பட்டு சில பெண்கள் ஜிம்மிற்கு செல்ல மாட்டார்கள். அவர்களுக்கு வீட்டில் இருந்தப்படியே தங்களது பின்னழகை ஃபிட்டாக வைத்து கொள்ள எளிய உடற்பயிற்சிகளை பல உள்ளன.

அந்தவகையில் உங்கள் பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், கீழ் கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில் தினமும் செய்து வந்தாலே போதுமானது.

தற்போது அந்த உடற்பயிற்சியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

குந்து பயிற்சி

உட்கார்ந்து எழுந்து செய்யும் இந்த குந்து பயிற்சி செய்வதன் மூலம் உங்களது பின்னழகு மட்டுமின்றி தொடை பகுதியும், இடுப்பு பகுதியும் கூட வலுவாகும்.

ஸ்டேப்-அப்ஸ்

வீட்டில் இருந்தே செய்யக்கூடிய படிகள் ஏறி இறங்கும் பயிற்சியினால் உங்கள் பின்னழகில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறைந்து வட்டவடிவாக உதவும்.

லாஞ்சஸ்

லாஞ்சஸ் என்பது எடையை கைகளில் தாங்கி ஒரு காலை முன்வைத்து மற்றொரு காலை மட்டும் மண்டியிட வேண்டும்.

இதன் மூலம் உங்கள் கால்கள் ஸ்ட்ரெச்சிங் ஆகும். இது போல இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்வதனால் உங்கள் பின்னபக்கம் இருக்கும் கொழுப்பு விரைவில் குறையும்.

கிக்-பேக்

ஒரு முனையில் எடையுடன் கட்டப்பட்ட கம்பி இருக்கும். மற்றொரு முனை உங்கள் காலோடு இணைக்கப்பட்டிருக்கும்.

இப்போது உங்கள் காலை பின்னோக்கி உதைப்பதை போல இழுக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால், தொடை, பின்பகுதி மற்றும் இடுப்பு பகுதி வலிமைடையும்.

இந்த பயிற்சி செய்யும் போது உங்கள் முட்டி பகுதி மடங்காது செய்ய வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers