ஸ்கிப்பிங் செய்தால் எடை குறையுமா? ஸ்கிப்பிங் யார் எல்லாம் செய்யக் கூடாது ?

Report Print Kavitha in உடற்பயிற்சி

ஸ்கிப்பிங் என்பது ஒருவகை உடற்பயிற்சி முறை ஆகும். இதனை கயிறு தாண்டும் பயிற்சி என சொல்லப்படுகின்றது.

உடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது இந்த பயிற்சி.

இருப்பினும் இந்த பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றது. அதிலும் இந்த பயிற்சியை எங்கும் எப்போதும் செய்யலாம்.

இது ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும். உடலின் சமநிலைத் தன்மை மற்றும் சுறுசுறுப்பை அதிகரிக்கும்.

மேலும் இந்த பயிற்சியை செய்யும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களையும், இந்த பயிற்சி செய்தால் எடை குறையுமா எனவும் யார் எல்லாம் இந்த பயிற்சி செய்ய கூடாது எனவும் இங்கு பார்த்து தெரிந்து கொள்ளுவோம்.

ஸ்கிப்பிங் செய்தால் எடை குறையுமா?

ஸ்கிப்பிங்’ செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும் என சொல்லப்படுகின்றது.

ஸ்கிப்பிங் செய்வதால், கலோரிகள் எரிக்கப்படுகின்றது. குறிப்பாக 10-15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்தால், 200 கலோரிகளை எரிக்கலாம் எனப்படுகின்றது.

அந்தவகையில் ஸ்கிப்பிங் செய்வதனால் உடல் எடை குறையும் என சொல்லப்படுகின்றது.

ஸ்கிப்பிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை
  • ஸ்கிப்பிங் எந்த அளவுக்கு உடலுக்கு முக்கியமோ, அதே அளவு ஸ்கிப்பிங் கயிற்றின் நீளம் மிக முக்கியம். கயிற்றை உங்களின் உயரத்துக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • ஒரு கயிற்றில் சரியான நீளத்தை தேர்வுசெய்ய, நீங்கள் கயிற்றின் மத்தியில் கால்களை வைத்து உயர்த்திப்பிடிக்க வேண்டும்.
  • அது உங்களின் வயிற்றுப் பகுதிக்கு மேல் இருந்தால் அது சரியான அளவு.
  • ஸ்கிப்பிங் கயிற்றின் முனையில் அதிக கயிறு கையைவிட்டு வெளியே வராத அளவு நடுவில் பிடிக்க வேண்டும்.
  • ஸ்கிப்பிங் கயிற்றை கைகளில் பிடிக்கும்போது கயிற்றின் நுனியிலும் கையின் நுனியிலும் பிடிக்கக் கூடாது. அதேபோன்று அதிக கயிறு கைகளைவிட்டு வெளியில் வரும்படியும் பிடிக்கக் கூடாது.
  • தரம் குறைவான ஸ்கிப்பிங் கயிற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது உங்களின் பயிற்சியை கடினமானதாக மாற்றும்.
  • நல்ல தரமான கயிற்றை பயன்படுத்தவும். இது உங்கள் பயிற்சிக்கும் உங்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும்.
ஸ்கிப்பிங் யார் செய்யக் கூடாது ?

அதிக உயரம் கொண்டவர்கள் கயிறு தாண்டும் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.

இதய நோயாளிகள் ஸ்கிப்பிங் பயிற்சியை தவிர்க்கவும்.

கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியை தவிர்க்கலாம்.

எலும்பு முறிவு உடையவர்கள் மற்றும் சுளுக்கு ஏற்பட்டவர்கள் இந்த பயிற்சிகளை தவிர்க்கவும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்