சிக்ஸ் பேக் வைக்க நினைப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஓர் எச்சரிக்கை

Report Print Kabilan in உடற்பயிற்சி

சிக்ஸ் பேக் வைப்பதற்காக ஸ்டீராய்டு எனும் ஊக்க மருந்தை, ஆண்கள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இங்கு காண்போம்.

சிக்ஸ் பேக்
  • பொதுவாக உடலில் சேரும் கொழுப்புகள் உடலியக்கத்தின் காரணமாக கரைந்துவிடும். ஆனால், சில கொழுப்புகள் கரையாமல் ஆங்காங்கே தங்கிவிடும். அவ்வாறு தங்கும் கொழுப்புகளை கரைத்து, வயிற்றுப் பகுதியில் தசைகளாக மாற்றுவது தான் சிக்ஸ் பேக்.
  • இந்த சிக்ஸ் பேக்கை நீண்ட நாட்கள் பராமரிப்பது என்பது கடினம். அதற்காக பலர் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதோடு, ஸ்டீராய்டு மருந்துகளையும் எடுத்து கொள்கிறார்கள்.
  • ஆனால், இந்த ஸ்டீராய்டு மருந்தை எடுத்துக் கொள்வதால் உடலில் உள்ள ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் அளவு அதிகரிப்பதால், உடல் எடை அதிகரிக்கும். அத்துடன் தசைகளின் வளர்ச்சியும் அதிகமாகும்.
  • இந்த ஸ்டீராய்டு மருந்தானது உடலுக்கு பல தீமைகளை உண்டாக்கும். குறிப்பாக ஆண்மை குறைவு, கல்லீரல் புற்றுநோய், குரலில் மாற்றம், அதிக அளவிலான முடி வளர்ச்சி, பார்வை குறைபாடு, நரம்பு தளர்ச்சி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
  • சிக்ஸ் பேக் வைப்பவர்கள் உடலில் கொழுப்பை 9 சதவிதமாக குறைக்க வேண்டும். அத்துடன் நீர்ச்சத்தை 40 சதவிதமாக குறைக்க வேண்டும். இதன்மூலம் அவர்களின் புரதச்சத்து அதிகரிக்கும். ஆனால், சிக்ஸ் பேக் வைப்பதற்காக புரதச் சத்தினை அதிகம் எடுப்பதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
  • மேலும், ஒரு கட்டத்தில் சிறுநீரகம் செயலிழந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் உடல் வெப்பம் அதிகரிக்கும்.
  • சிக்ஸ் பேக்கிற்கு என கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, தசைநார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஆனால் முதுகு வலி, உடல் வலி, காயம் போன்றவை ஏற்படாமல் தடுக்க தசைநார்கள் முக்கியம்.
  • இதனால், சிக்ஸ் பேக் வைக்க நினைப்பவர்களுக்கு கடுமையான உடல் வலிகள் மற்றும் பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படும். எனவே, அழகுக்கு ஆசைப்பட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்