தொடையில் அதிகப்படியான சதையா?

Report Print Fathima Fathima in உடற்பயிற்சி

பெண்களில் ஒரு சிலருக்கு தொடைப்பகுதியில் அதிகப்படியான சதை இருக்கும், இதனால் எந்த உடை போட்டாலும் பார்க்க நன்றாக இருக்காது.

தொடர்ந்து நடைப்பயிற்சி செய்து வந்தால் சதை படிப்படியாக குறையும்.

நடைப்பயிற்சி செய்ய இயலாதவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த உடற்பயிற்சியை செய்து வரலாம்.

  • முதலில் தரையில் ஒருக்களித்து படுத்துக் கொள்ளுங்கள்.
  • வலது கையை தலையின் அடியில் வைத்துக் கொண்டு, இடது கையை மார்புக்கு நேரே தரையில் வைக்க வேண்டும்.
  • மூச்சுக்காற்றை உள்ளே இழுத்தபடி இடது காலை மேலே உயர்த்தவும், மூச்சுக்காற்றை வெளியே விட்ட காலை இறக்கவும்.
  • தொடர்ந்து 10 தடவை இப்படி செய்யவும், நன்கு பழகிய பின்னர் 25 தடவை செய்யலாம், ஒரு பக்கம் மட்டும் செய்தால் போதும்.

ஒரு மாதத்தில் அதிகப்படியான சதை குறைந்திருக்கும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers