கைகள் தொங்குகிறதா? உங்களுக்கான உடற்பயிற்சி இதோ

Report Print Fathima Fathima in உடற்பயிற்சி
420Shares
420Shares
ibctamil.com

பெண்களில் பலருக்கும் கைகளில் அதிகளவு சதை இருக்கும், இதற்கு காரணம் கொழுப்பு படிவது தான்.

கைகள் தொங்கியபடி இருந்தால் உடலமைப்பே மாறிவிடும், இதற்கு தீர்வு தான் One Arm Triceps பயிற்சி.

  • முதலில் விரிப்பில் முழங்கால்களை சற்று முன்னோக்கி மடக்கியபடி, நேராக நிற்க வேண்டும்.
  • வலது கையில் சிறிய டம்பிள்ஸைப் பிடித்து, பின்னோக்கிக் கொண்டுவந்து, வலது காதுகளை ஓட்டி இருப்பதுபோல் வைக்கவும்.
  • இடது கையை வயிற்றுப் பகுதியில் மடித்துவைக்கவும்.
  • இப்போது, டம்பிள்ஸ் பிடித்துள்ள கையை மேல் நோக்கி உயர்த்தி இறக்கவும்.
  • கைகளை உயர்த்தும் போது, மூச்சை நன்றாக இழுத்து, கைகளை இறக்கும்போது மூச்சை வெளியேற்ற வேண்டும்.
  • இதேபோல், இடது கைக்கும் செய்ய வேண்டும், இரு கைகளுக்கும் தலா ஐந்து முதல் 15 முறை செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்