காலையில் வெறும் வயிற்றில்: தினம் 5 நிமிடம் இதை செய்தாலே போதும்...?

Report Print Printha in உடற்பயிற்சி

ஆரோக்கியமான உடலை பெறுவதற்கு நாம் அனைவருமே காலையில் எழுந்தது உடற்பயிற்சி, யோகாசனம் மற்றும் சுடுநீர், பழச்சாறு குடிப்பது போன்றவற்றை பின்பற்றுவோம்.

ஆனால் அதற்கு பதிலாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள பயிற்சியை தினமும் 5 நிமிடம் செய்து வந்தால் இதய நோய் முதல் கால் வீக்கம் வரை சரியாகும்.

எப்படி செய்ய வேண்டும்?

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுவருக்கு அருகில் ஒரு துணியை விரித்து சுவரை பார்த்தாற் போல் எதிர்த் திசையில் படுக்க வேண்டும்.

அதன் பின் கால்களை நேராக உயர்த்தி சுவரின் மேற்பரப்பில் சமமாக வைக்க வேண்டும், அதாவது பார்ப்பதற்கு L வடிவில் சரியாக 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும்.

இந்த நிலையில் சுமார் 5 நிமிடங்கள் இருக்க வேண்டும். இந்த கால நேரத்தில் கண்களை மூடி மூச்சை நன்கு உள்ளிழுத்து பொறுமையாக வெளியிட வேண்டும்.

பலன்கள்
  • இதயத் துடிப்பு சீராகி, இதயத்தில் எவ்வித கோளாறுகளும் வராமல் தடுக்கும்.
  • வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அழுத்தம் மற்றும் குடல்களில் ஏற்படும் அடைப்பு போன்ற பிரச்சனையை சரிசெய்கிறது.
  • கால்களில் ரத்தோட்டத்தை சீராக்கி, கால்களில் ஏற்படும் வீக்கத்தை போக்குகிறது.
  • உடல் முழுவது ரத்தோட்டத்தை சீராக்கி, ரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்