உடல்நலக் கோளாறுகளை தடுத்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகிறது.
அந்த வகையில் படகு ஆசனம் என்று அழைக்கப்படும் நவ்காசனத்தை, தினமும் காலையில் 5-7 முறைகள் செய்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து எளிதுல் விடுபடலாம்.
நவ்காசனம் செய்வது எப்படி?
முதலில் விரிப்பின் மீது கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் மெதுவாக மேலே தூக்கிய பின் தலை, கழுத்தை மெதுவாக மேலே தூக்க வேண்டும்.
அதன் பின் கைகளை நேராக நீட்டி, மூச்சை சாதாரண நிலையில் வைத்து கொண்டு, சில விநாடிகள் இதே நிலையில் இருந்த பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
பலன்கள்
- அஜீரணக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்றவை நீங்கும்.
- வயிற்றில் உள்ள கொழுப்புகள் கரைந்து வயிறு பிட்டாக இருக்கும்.
- நீரிழிவு நோய் பாதிப்பில் இருந்து விடுபட உதவுகிறது.
- நரம்புத்தளர்ச்சியைப் போக்கி உடலை வலிமையாக்குகிறது.
- ஆஸ்துமா நோய்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைகிறது.