காலையில் இதை செய்யுங்கள்: 17 நோய்கள் குணமாகும்

Report Print Printha in உடற்பயிற்சி
539Shares
539Shares
ibctamil.com

தினமும் காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்யும் போது பிராண சக்தி மட்டும் உடலில் செல்லும்.

அப்படி செல்லும் போது நம் உடலில் உள்ள தீய சக்தி கால் பாதத்தின் வழியே வெளியில் சென்றுவிடும்.

அதுவே எட்டு வடிவில் நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் பல்வேறு நோய்களின் பாதிப்புகள் குணமாகும்.

யாரெல்லாம் செய்யக் கூடாது?

எட்டு வடிவில் நடைப்பயிற்சியினை அனைவருமே செய்யலாம். ஆனால் கருவுற்ற பெண்கள், புற்றுநோய் உள்ளவர்கள் மட்டும் செய்யக் கூடாது.

எட்டு வடிவ நடைப்பயிற்சியில் பின்பற்ற வேண்டியவை?

எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யும் போது காலணி அணியக் கூடாது. ஏனெனில் அப்போது தான் புவிஈர்ப்பு சக்தியின் மூலமாக மனிதனின் உடலில் உள்ள தீய சக்தி வெளியேறும்.

எட்டு வடிவ நடைப் பயிற்சியை மண் தரை, சிமெண்டு தரை, தார்ரோடு, சிமெண்ட் ரோடு போன்ற இடங்களில் செய்தால் நல்ல பயன் கிடைக்கும்.

மூன்று விதமான அளவுகளில் எட்டு வடிவ நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம். அதாவது,

 • 4 அடி அகலம் 5 அடி நீளம்.
 • 6 அடி அகலம், 9 அடி நீளம்.
 • 6 அடி அகலம் 15 அடி நீளம்.

எட்டு போடும் போது அதன் நீளவட்டம் வடக்கில் இருந்து தெற்காகவும், கிழக்கில் இருந்து மேற்காகவும் அமைக்க வேண்டும். முடிந்த வரை வடக்கு, தெற்கு திசையில் தான் இருக்க வேண்டும்.

இரவு உணவுக்குப் பின்பு 45 நிமிடம் கழித்து வரைந்த எட்டு மீது 20 நிமிடம் நடக்க வேண்டும்.

முதலில் வடக்கு இருந்து தெற்காக 10 நிமிடமும், பின்பு தெற்கில் இருந்து வடக்காக 10 நிமிடமும் நடந்தாலே போதும்.

8 வடிவ நடைப்பயிற்சியினால் குணமாகும் நோய்கள்?

 • அஜீரணம்
 • மலச்சிக்கல்
 • இருதயம் சீராகும்
 • மூச்சு திணறல்
 • மூக்கடைப்பு
 • மார்புச்சளி
 • கெட்ட கொழுப்பு கரையும்
 • உடல் எடை குறையும்
 • மனஅழுத்தம்
 • ரத்த அழுத்தம்
 • தூக்கமின்மை
 • கண் பார்வை தெளிவாகும்
 • கெட்டவாயு வெளியேறும்
 • சக்கரங்கள் சமநிலையில் இயங்கும்
 • தலைவலி, பின்பக்க தலைவலி சரியாகும்
 • குதிகால் வலி, மூட்டு வலி, சரியாகும்
 • சர்க்கரை நோய் சரியாகும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்