வீட்டிலே இதை செய்யுங்கள்: தொப்பை குறைவது தெரியுமாம்

Report Print Printha in உடற்பயிற்சி
1265Shares
1265Shares
lankasrimarket.com

தொப்பை பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இத்தகைய பிரச்சனையை தடுக்க வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வந்தாலே நல்ல பலனை பெறலாம்.

plank walks exercise

இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். பின் வலது கை, வலது காலை வலது பக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கை, கால்களுக்கும் செய்ய வேண்டும்.

Squats

இது நாற்காலியில் அமர்ந்து செய்வது போன்ற ஒரு உடற்பயிற்சி. கைகளை நேராக நீட்டிய வாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும்.

இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம்.

Mountain Climbers

மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வர வேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடலில் உள்ள கொழுப்புகள் கரையும்.

Toe To Bar

இப்பயிற்சியை செய்ய தொங்கக் கூடிய கம்பி இருந்தால் போதும். அதில் தொங்கிக் கொண்டு, கால் விரல்களால் அந்த கம்பியை தொட வேண்டும். இதனால் உடல் எடையில் நல்ல பலனைக் காணலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்