தினமும் காலை 45 நிமிடம் இதை செய்யுங்கள்: இந்த நோய்கள் வராது

Report Print Printha in உடற்பயிற்சி
387Shares

தினசரி உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் உடல் உழைப்பு குறைந்து, உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விடும்.

45 நிமிட நடைப்பயிற்சியால் கிடைக்கும் பலன்கள்
  • தினமும் காலையில் 45 நிமிடங்கள் இயற்கையான காற்றை சுவாசித்தபடி வாக்கிங் செல்லும் போது, மூச்சு விடுவதில் சிரமம் வராது.
  • உடல் எடை சீராக இருக்கும். எவ்வித நோய்களின் பாதிப்புகளும் வராது. உடலுக்குத் தேவையான விட்டமின் D கிடைக்கும்.
  • உடல் நலம், வயது, பாலினம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை பொருத்து அதற்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆசோசனைப்படி செய்ய வேண்டும்.
  • முதியவர்கள் அன்றாடம் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. ஒரே நேரத்தில் தொடர்ந்து செய்ய முடியவில்லை எனில், சில நிமிடங்களாக பிரித்துச் செய்யலாம்.
  • நடைப்பயிற்சி செய்யும்போது, 5-10 நிமிடங்களுக்கு மிதமான வேகம். கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்து அடுத்த 20 நிமிடங்களுக்கு அதிவேகம் என்று வேகத்தைப் படிப்படியாகக் குறைத்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.
  • பாதம் தொடுதல், கைகளை உயர்த்துதல், மணிக்கட்டைச் சுழற்றுதல், குதிகால் சுழற்றுதல், முட்டியை மடக்குதல், கழுத்து அசைவுகள் போன்ற தசை இழுப்புப் பயிற்சிகளை தினமும் 5 முறை செய்யலாம்.
  • நடைப்பயிற்சிக்கு உரிய காலணிகளை உபயோகிக்க வேண்டும். அதனால் மூட்டுத் தேய்மானம் கட்டுப்படுத்தப்பட்டு குதிகால் வலி ஏற்படாது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்