உங்களுக்கு காதில் பிரச்சனையா? இதை ட்ரை பண்ணுங்க

Report Print Printha in உடற்பயிற்சி

காது கேளாமை, காதில் அடைப்பு போன்ற காது தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க சூன்ய முத்திரை பெரிதும் உதவுகிறது.

இந்த முத்திரையை காது கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி, தினமும் 45 நிமிடங்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சூன்ய முத்திரை செய்வது எப்படி?

முதலில் விரிப்பில் அமர்ந்து கொண்டு நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். பின் கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.

பயன்கள்

இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு மிகவும் சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும்.

அதேபோல் இடது காதில் உள்ள கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும்.

குறிப்பு

சூன்ய முத்திரையை காது கோளாறு இல்லாதவர்கள் செய்யக் கூடாது. ஏனெனில் அப்படி செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.

இந்த முத்திரையை செய்யும் போது இரண்டு கைகளையும் உபயோகிக்கக் கூடாது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்