தினம் 100 கலோரி: 5 கிலோ எடையை ஈஸியா குறைக்கலாம்

Report Print Printha in உடற்பயிற்சி

உடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருக்க பலரும் பல்வேறு வழிகளை தேடி அலைவார்கள். ஆனால் தினமும் சில எளிய உடற்பயிற்சியின் மூலம் 100 கலோரியை எரித்து 5 கிலோ எடையை ஈஸியாக குறைத்து விடலாம்.

தினமும் 100 கலோரி எரிக்க என்ன செய்யலாம்?
  • தினமும் 20 நிமிடத்தில் 1 மைல் தூரத்துக்கு நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
  • தினமும் 20 நிமிடத்திற்கு தோட்டத்தில் புல்வெட்டுதல் அல்லது செடி நடுவது போன்ற குனிந்து நிமிரும் வேலையை செய்ய வேண்டும்.
  • தினமும் 30 நிமிடத்திற்கு வீட்டை சுத்தம் செய்யும் பணியை செய்யலாம்.
  • தினமும் 10 நிமிடத்திற்கு ஓட்டப்பயிற்சியை செய்து வர வேண்டும்.
  • தினமும் 9 நிமிடத்திற்கு ஸ்கிப்பிங் பயிற்சியை செய்ய வேண்டும்.
  • தினமும் 20 நிமிடத்திற்கு நன்கு குனிந்து தரையை துடைப்பதை ஒரு பயிற்சியாக செய்யலாம்.
  • நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 5 நிமிடங்கள் இடைவெளி விட்டு, 5 நிமிடம் நடந்து வரலாம். அதனால் ஒரு நாளைக்கு 20 நிமிடம் வாக்கிங் சென்றதற்கான பலனை பெறலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers