கருப்பை நீர்க்கட்டியை போக்க அற்புத வழி

Report Print Printha in உடற்பயிற்சி
277Shares

இளம் வயதில் பூப்படைதல், மாதவிடாய் பிரச்சனை, மெனோபாஸ் இது போன்ற அடுத்தடுத்த நிலைகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான இது போன்ற பிரச்சனைகளுக்கு யோகா எளிய தீர்வினை அளிக்கிறது.

பெண்கள் செய்ய வேண்டிய யோகா பயிற்சிகள்?

யோகா செய்யும் முன் முதலில் மூச்சுப் பயிற்சியை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தினமும் 5 நிமிடங்கள் செய்தாலே போதும். இதனால் ரத்தோட்டம் சீராகி, நல்ல தூக்கம் மற்றும் மனதிற்கு அமைதி கிடைப்பதுடன், ஆஸ்துமா தொல்லைகள் இருக்காது.

பச்சிமதானாசனா

கால்கள் முன்புறம் நீட்டி, தலையை மெதுவாக குனிந்து முகம் கால் முட்டியில் லேசாக படுமாறு வைக்க வேண்டும். இதனால் வயிற்று மடிப்புகள் நன்கு மடிந்து அடிவயிற்று உறுப்புகள் நன்றாக செயல்படும்.

பத்தகோணாசனா

நேராக அமர்ந்து இரண்டு கால்களையும் அகலமாக விரித்து, பாதங்களை மட்டும் ஒன்று சேர்த்து வேண்டும். இந்த பயிற்சியை மல்லாந்து படுத்து கொண்டு கைககள் மற்றும் கால்களை இரு புறத்திலும் விரிக்க வேண்டும்.

இதனால் கருப்பை நீர்க்கட்டிகள் குணமாகுவதுடன், இடுப்பு பகுதியின் செயல்பாடு நன்றாக இருக்கும்.

யோகமுத்ராசனா

கால்களை பத்மாசனத்தில் வைத்து அமர்ந்து கைகளை பின்புறமாக மடித்து வைத்து தலையை குனிந்தபடி, மெதுவாக தரையை தொடுமாறு வைக்க வேண்டும். இதனால் தொப்பை குறைந்து வயிற்றுப் பகுதி சீராகும்.

ஜானுசிரசானனா

அமர்ந்து கொண்டு ஒரு காலை மடக்கி, மற்றொரு காலை நீட்டி, குனிந்துக் கொண்டு கால்களை இரு கைகளாலும் பிடித்தவாறு வைக்க வேண்டும். இதனால் அடிவயிற்று பகுதி உறுப்புகளின் செயல்பாடு சீராக இருக்கும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்