உடற்கட்டுமான போட்டியில் கலக்கிய இலங்கை பெண்!

Report Print Vethu Vethu in உடற்பயிற்சி

அமெரிக்காவில் நடைபெற்ற மூன்று உடற்கட்டுமான (Body Building) போட்டிகளில் மூன்று வெவ்வேறு சாம்பியன் பட்டங்களை இலங்கை பெண் ஒருவர் பெற்றுள்ளார்.

தில்ருக்ஷி சொலமன் ஆரச்சி என்ற இலங்கை பெண்ணே இந்த சாதனையை படைத்துள்ளார்.

அவர் 2003ஆம் ஆண்டு தனது சகோதரியுடன் மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா சென்றார்.

அங்கு அவர் பொழுது போக்காக உடற்கட்டுமான பயிற்சியில் ஈடுபட்டார். அவருக்கு கிடைத்த உதவிக்கமைய அவர் பெண்கள் உட்கட்டுமான பிரிவு போட்டியில் கலந்து கொள்வதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்த வெற்றி தொடர்பில் கருத்து வெளியிட்டவர்,

நான் கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்தவர். எனது குடும்பத்தில் 6 பேர் உள்ளனர். நான் உயர் கல்வியை கம்பஹா சித்தார்த மஹா வித்தியாலயத்தில் கற்றேன். எனினும் அங்கு விளையாட்டு பிரிவில் அந்த அளவில் திறமையை வெளிப்படுத்தவில்லை.

அண்ணா உடற்கட்டுமான பயிற்சி நிறுவனம் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். அதில் பெற்ற பயிற்சியை நான் அமெரிக்காவில் தொடர்ந்தேன்.

கடந்த வருடம் இடம்பெற்ற போட்டியில் கலந்துக் கொண்டு 3 பதக்கங்களை வென்றுள்ளேன். இந்த போட்டியில் கிட்டத்தட்ட 150 பேர் கலந்து கொண்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தில்ருக்ஷி NPC Lee banks Natural Championships 2017(Bikini) போட்டியில் வெற்றி பெற்றதோடு, Class A பிரிவில் முதலாம் இடத்தை வென்றுள்ளார். Masters over 35 பிரிவிலும் அவர் முதலாம் இடத்தை வென்றுள்ளார்.

“National Body Building Championship போட்டியில் கலந்து கொண்ட தில்ருக்ஷி முதலாம் இடத்தை வென்றுள்ளார்.

எனது புகைப்படத்தை பேஸ்புக்கில் முதல் முறையாக நான் பதிவு செய்த போது, நான் ஆண் ஆகுவதற்கு முயற்சிப்பதாக கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் அவற்றில் பின் வாங்கவில்லை. எனது கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து பொறியியலாளராக நான் தொழில் செய்கிறேன்.

அதேபோல் எனது குடும்ப வாழ்க்கையும் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளேன். எனக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது.

நான் ஒரு இலங்கை பெண், எந்தவொரு விருப்பமான விடயம் செய்யும் போதும் மற்றவர்களுக்காக அதனை மாற்றி கொள்ள வேண்டாம் என நான் இலங்கை பெண்களுக்கு குறிப்பிடுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments