உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள்

Report Print Meenakshi in உடற்பயிற்சி

உடற்பயிற்சியினை செய்ய தொடங்கும் முன்னர் அளவுக்கு அதிகமாக உணவினை எடுத்து கொள்ளக் கூடாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒரு விஷயம்.

அதே போன்று உடற்பயிற்சிக்கு முன்னர் வெறும் வயிற்றிலும் இருக்க கூடாது.

உடற்பயிற்சியினை தொடங்கும் முன்னர் மிக எளிதாக செரிக்கக்கூடிய உணவுகளை நாம் கட்டாயம் எடுத்து கொள்ளவேண்டும்.

ஓட்ஸில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகளவில் உள்ளதால் உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து அதிக நேரம் உடற்பயிற்சி செய்ய உதவுகிறது.

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமானது உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதோடு தசைகள் வலுப்பெற உதவுகிறது.

வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், ரிபோபிளேவின், செலினியம் உடற்பயிற்சியின் போது தேவையான ஆற்றலை வழங்குகிறது.

இளநீரில் உள்ள எலக்ரோலைட்டுகள் மற்றும் பொட்டாசியமானது உடற்பயிற்சிக்கு தேவையான சக்தியினை வழங்குவது மட்டுமல்லாது, உடலில் நீர்ச்சத்தினை தக்கவைக்கிறது.

அவகேடா பழத்தினை உடற்பயிற்சிக்கு சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடற்பயிற்சியின் முழுநன்மையினையும் தரும்.

முழுதானிய உணவுகள், கொழுப்பு நிறைந்த யோகர்ட், பழுப்பு அரிசி உணவுகள், பழங்கள், வேகவைத்த காய்கறிகள் சாப்பிடலாம். போதுமான தண்ணீர் அருந்த வேண்டும்.

உடற்பயிற்சியினை தொடங்க 5 நிமிடங்கள் தான் உள்ளதென்றால் ஒரு வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சாப்பிடலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments