தினசரி 20 நிமிடம் இதை கட்டாயம் செய்யுங்க

Report Print Meenakshi in உடற்பயிற்சி

நம் உடலில் ஏற்படும் நோய்களை தடுக்க நாம் முறையான உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றினை செய்தாலே போதுமானதாகும். உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் உள்ளது.

சரியான முறையில் தொடர்ந்து உடற்பயிற்சிகளை செய்துவருவதால் இதய நோய், இரத்த அழுத்தம் போன்றவற்றினை கூட தடுக்க இயலும்.

வயிற்று கோளாறுகளை குணப்படுத்தப்பயன்படும் எளிய முத்திரை தான் ஆதி முத்திரை.

செய்யும் முறை

தரையில் சப்பளங்கால் இட்டு நேராக அமர்ந்து கொள்ள வேண்டும் அல்லது நாற்காலியில் தரையில் கால் படும்படி நேராக அமர்ந்து கொள்ளவேண்டும்.

பின் கட்டை விரல் சுண்டுவிரலின் மேட்டுப்பகுதியில் அழுத்துமாறு வைக்கவேண்டும். கட்டைவிரலினை ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலினை மடக்கி சுற்றி மூடி கொள்ளவேண்டும்.

தினமும் இந்த முத்திரையினை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள்

நுரையீரலின் மேற்பகுதிக்கு ஆக்ஸிஜன் செல்ல உதவுகிறது. முறையற்ற சுவாசம் மற்றும் அனைத்து சுவாச பிரச்சனைகள் தீரும்.

தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது.

மூளை மற்றும் தொண்டைப்பகுதிக்கு இரத்த ஓட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும்.

வயிற்று கோளாறுகள், செரிமான பிரச்சனைகள், உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் போன்றவை சரியாகும்.

தோல், நாக்கு, கண், மூக்கு, காது, ஆகிய ஐந்து புலன்களுக்கும் இழந்த சக்தியை மீட்டு தரும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments