படுக்கையில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

Report Print Aravinth in உடற்பயிற்சி

அதிகாலையில் படுக்கையில் இருந்து எழும் பொழுது இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என மனம் மிகவும் வருந்தும், இது உடலின் ஒரு வித சோம்பல் தான்.

இந்த சோம்பலின் போது படுக்கையில் இருந்து உடனே எழுந்து கொள்ளாமல் சிறிது நேரம் படுத்துக்கொண்டே நான்கு வித உடற்பயிற்சிகளை செய்தால் சோம்பலை போக்குவதோடு, சுறுசுறுப்பான நாளையும் உணரமுடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்பயிற்சி 1

முதலில் பத்மாசன முறையில் அமர்ந்துக்கொண்டு, இரண்டு கைகளையும் நம் முகத்துக்கு நேராக வரும்படி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் அப்படியே இரு கைகளையும் தலைக்கு மேலே கொண்டு சென்று, முதலில் வலது புறமாகவும், பின்பு, இடது புறமாக சாய வேண்டும்.

இந்த உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலின் மேல்பகுதி, தோள்பட்டை, கைதசைகள் நன்றாக ஸ்டிரெச்சாகும்.

உடற்பயிற்சி 2

இந்த உடற்பயிற்சி செய்வதற்கு முதலில் படுக்கையில் நன்றாக படுத்துக் கொண்டு, பின் ஒருகாலை வயிறு அருகே வரும்படி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு, அந்த காலை எதிர்கையை கொண்டு மற்றொரு கையை தரையில் படும் படி வைத்துக்கொண்டு முதுகு தண்டுவடத்தை இரு திசையிலும் வளைக்க வேண்டும்.

இதனால் முதுகு தண்டுவடம் வலுப்பெறுகிறது.

உடற்பயிற்சி 3

இதை செய்ய தரையில் படுத்துக்கொண்டு, இருகையின் விரல்களும் வெளிப்புறமாக படும்படி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் மெதுவாக கைகளின் துணையுடன் இடுப்பை உயர்த்த வேண்டும். பின் சிறிது நேரம் அப்படியே வைத்துக்கொண்டு மீண்டும் செய்ய வேண்டும்.

இது இடுப்பு, அப்டோமன், மற்றும் மார்புகளுக்கு மிகவும் நல்லது.

உடற்பயிற்சி 4

கடைசி பயிற்சி என்பதால் முதலில் படுக்கையை விட்டு எழுந்து நேராக நின்று கொள்ள வேண்டும்.

பின் இரு கைகளையும்மேலே தூக்கிக் கொண்டு மூச்சை நன்றாக உள்வாங்கிக் கொண்டு முட்டிகளை மடக்காமல் முன்புறமகாகவும், தொடர்ந்து பின்புறமாகவும் குனிய வேண்டும்.

இதனால் ஒட்டுமொத்த உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments