இலங்கையின் கல்வித்துறை முன்னேற்றத்துக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி

Report Print Aasim in நிதி

இலங்கையின் கல்வி முன்னேற்ற நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தின் போது இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இலங்கை தற்போதைக்கு கல்வியில் உயர்நிலையில் காணப்படுகின்ற போதிலும் நடுத்தர உயர்வருமானம் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதாயின் கல்வித்துறை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

குறித்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்படவுள்ளது.

குறித்த நிதியைக் கொண்டு கல்வித்துறையை நவீன மயப்படுத்தவும், ஆரம்பக் கல்வி தொடக்கம் தொழிற்கல்வி வரையான மாணவர்களுக்கு சலுகைகளை வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும் நிதி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers