விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன? விரதம் இருப்பது எப்படி? முழு விளக்கம் இதோ..

Report Print Akkash in விழா
188Shares
188Shares
lankasrimarket.com

மும்மூர்த்திகளும், வேதங்களும் புராண நூல்களும் போற்றிப் புகழும் தனிப் பெருந்தெய்வம் விநாயகர். அவரை வழிபட்டால் பேரும், புகழும், செல்வமும் உண்டாகும். தீராத நோய்கள் தீரும், கிரக தோஷங்கள் நீங்கும், நல்ல கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம்.

விநாயகர் அவதரித்த நாள் விநாயகர் சதுர்த்தியாக உலகம் முழுதும் உள்ள இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று விநாயகர் சதுர்த்தி விரதமாகும்.

விநாயகர் என்றால் அவரை விட வேறு தலைவர் இல்லை என்பது பொருள். ஈஸ்வரனின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு.

ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இயலாதவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் விரதம் இருக்கலாம்.

விநாயகர் சதுர்த்தி அன்று சதுர்த்தி திதி நேரத்தில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று முறைப்படி விநாயகரை தரிசித்து விட்டு பிறகு தான் பூஜைக்குரிய களிமண் பிள்ளையாரை வாங்க வேண்டும்.

மேலும், இந்த விரதம் குறித்து முழுமையான தகவல்களை அகில இலங்கை இந்து மாமன்றத்திலிருந்து சிவஸ்ரீ வைதீஸ்வர குருக்கள் விளக்கியுள்ளார்.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்