நல்லூருக்கு படையெடுத்து வந்த வெளிநாட்டவர்கள்

Report Print Shalini in விழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவில், நேற்றைய தினம் சுமார் 1 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், இந்தியாவிலிருந்தும் நேற்று அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்திய அடியார்கள் நல்லூர் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்று எதிர்வரும் 8ஆம் திகதி தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்