உங்கள் தலை முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த பேக்கை தடவுங்கள்

Report Print Nalini in நவீன அழகு

ஒருவரின் அழகை இன்னும் மேலும் மெருகேற்றிக் காட்டுவதற்கு தலைமுடிக்கு முக்கிய பங்கு உள்ளது.

பல தலைமுறையாக கூந்தல் பராமரிப்பு முறை நடைபெற்று வருகின்றன. இன்றைய நாட்களில் கூந்தலைப் பராமரிப்பதில் பலரும் தனிக்கவனம் செலுத்துகிறார்கள்.

தற்போது சந்தைகளில் கூந்தல் பராமரிப்பிற்கான பலவித பொருட்கள் விற்கப்படுகின்றன.

இவை கூந்தல் உதிர்வு, வறண்ட தலைமுடி, பொடுகு என்று பல வித கூந்தல் பிரச்சனைக்கு தீர்வைத் தருவதாக விளம்பரம் செய்யப்படுகின்றன.

இவைகளினால் கூந்தல் புத்துணர்ச்சி பெறுகிறது என்பதை உறுதியாக யாராலும் கூற முடியாது.

வாழைப்பழ பேக்

ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். நீளமான கூந்தல் என்றால் இரண்டு வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம்.

அந்த வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழ விழுதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

வறண்டு அழுக்காக இருக்கும் தலையை சுத்தம் செய்ய, தேவைப்பட்டால் ஒரு சிறு கற்பூரத்தை இந்த கலவையுடன் சேர்த்து கலக்க வேண்டும்.

இந்த கலவையை உங்கள் உச்சந்தலை, கூந்தல் வேர் மற்றும் முழு நீள கூந்தலில் தடவ வேண்டும்.

அரை மணி நேரம் இந்த கலவையை உங்கள் கூந்தலில் ஊற வைக்க வேண்டும்.

பிறகு வழக்கமான ஷாம்பூ அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட சீயக்காய் கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.

  • இப்படியே 2 அல்லது 4 வாரம் செய்தால் நல்ல மாற்றத்தினை காணலாம்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்