காலில் ஏற்படும் பாதவெடிப்புகள் போக்க இதை செஞ்சு பாருங்க!

Report Print Nalini in நவீன அழகு

பெண்களுக்கு பாத வெடிப்பு வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

இந்த பாத வெடிப்புக்கு முக்கிய காரணம் வீட்டில் பாத்திரம் கழுவுவது, உப்பு தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவது, பொருத்தமில்லாத செருப்பினை அணிவது என ஏகப்பட்ட காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால், வாராத்திற்கு ஒரு முறையாவது இந்த வழிமுறைகளை கைப்பிடித்தால் எளிதில், உங்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்து விடலாம்.

எப்படி காலில் ஏற்படும் பாதவெடிப்பை சரிசெய்யலாம் என்று பார்ப்போம்

  • பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் அதற்கான உயர்தர சிகிச்சை பெற்றாலும் குணமாக நாளாகிவிடும்.
  • ஆனால், உண்மையில் இதற்கான முழுமையான தீர்வு இயற்கை வழியில் தான் இருக்கிறது.
  • கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, பாதங்கள் மிருதுவாக மாறும்.
  • மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட்டு பின்பு தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.
  • பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தலாம்.
  • செயற்கை நூலினால் செய்யப்பட்ட கால் உறைகளைத் தவிர்த்து, காட்டன் கால் உறைகளை பயன்படுத்தலாம்.
  • பாதங்களை எலுமிச்சைப் பழத்தோலால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நன்றாகத் தேய்த்து வர பாத வெடிப்புகள் சரியாகிவிடும்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்