3 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஷூ! இதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?

Report Print Kavitha in நவீன அழகு
168Shares

நைக் நிறுவனத்தின் விளையாட்டு வீரர்கள் அணியக் கூடிய ஷூ ஒன்று இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

கடந்த 1972 ஆம் ஆண்டு 'மூன் ஷூ' என பெயரிடப்பட்டு இந்த ஷூ தயாரிக்கப்பட்டதுள்ளது.

இதனை நைக் நிறுவனத்தின் நிறுவனரும், தடகள பயிற்சியாளருமான பில் போவர்மேன் அப்போதைய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்க வீரர்களுக்காக தனிப்பட்ட முறையில் சிறப்பாக செய்தனர்.

1972 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்காக வெறும் 12 ஜோடி ஷூக்கள் மட்டுமே இந்த மாடலில் செய்யப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சமீபத்தில் நைக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி ஷூ ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அறிவித்தது முதல் இதனை வாங்க பல கோடீஸ்வரர்கள் போட்டி போட்டுள்ளனர்.

இதில் கனடாவை சேர்ந்த மைல்ஸ் நடால் என்பவர் அந்த ‘ஷூ’வை இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என ஏலத்தில் எடுத்துள்ளார்.

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன ஷூ என்ற பெருமையை இந்த 'மூன் ஷூ' பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்