ஆள் பாதி... ஆடை மீதி: கோல்டன் விருது விழாவில் கண்களுக்கு விருந்தளித்த பிரபலங்கள்

Report Print Deepthi Deepthi in நவீன அழகு

2019 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றது.

வழக்கம்போல இந்த நிகழ்ச்சிக்கு நடிகர், நடிகைகள் பல்வேறு டிசைன்களில் ஆடை அணிந்து வந்து கண்களுக்கு விருந்தளித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னால் மிஸ் இந்தியா அழகி, நடிகை மானஸ்வி எம்பராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட புடவையை அணிந்துகொண்டு வந்திருந்தார்.

இதுதான் மானஸ்வி கலந்து கொள்ளும் முதல் உலக விருது நிகழ்ச்சி என்பதால் ‘ இந்தியன் டச்’ இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் புடவை அணிந்து சென்றிருக்கிறார்.

இந்த வருடம் சிறந்த கவுன் என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் லேடி காகா.

சிறந்த பாடகி, பாடலாசிரியர் , நடிகை என பன்முகங்கள் கொண்ட லேடி காகா, நீல நிறத்தில் அணிந்து வந்த கவுன் விருது நிகழ்ச்சியை அலங்கரித்தது.

மேடை நடிகர் பில்லி போர்ட், கை வேலைபாடுகள் கொண்ட எம்பராய்டரி டிசைன் கேப் சூட்டை அணிந்து வந்திருந்துள்ளார்.

இந்த கோட் சூட்டை வடிவமைக்க டிசைனர் ராந்தி ராமிற்க்கு 6 மாதங்கள் ஆகியுள்ளது.

ஜுலியா அணிந்து வந்த ஆடை அதிக வேலைப்பாடுகள் இல்லாவிட்டாலும், அவரது உடலுக்கு கச்சிதமாக இருந்தது.

ஆடைக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் மேக்அப் என சிம்பிள் கூலாக இருந்தார். ஸ்டெல்லா மெக்கார்ட்னேதான் இவரின் ஆடையை வடிவமைத்தார்.

நிகழ்ச்சியில் எகிப்தியர்களை நினைவுக் கூறுவதைப் போல் ஜேனெலின் ஆடை இருந்தது.

தங்க நிற கோட்டிங் கொண்ட தொப்பி, லெதர் பெல்ட் என ஆடைக்கு காண்ட்ராஸ்டாக ஆக்ஸசரீஸ் தேர்வு இருந்தது. இந்த ஆடை செனல் பிராண்டின் வடிவமைப்பாகும்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers