பொடுகை நிரந்தரமாக போக்க உதவும் சில ஆயுர்வேத குறிப்புகள்!

Report Print Jayapradha in நவீன அழகு

பொடுகுத் தொல்லை பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று. அத்தகைய பொடுகை இயற்கை முறையில் போக்குவதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எப்படி சரிசெய்யலாம் என்று பார்ப்போம்.

கற்பூரம்

தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு கற்பூரம் சேர்த்து அந்த எண்ணெயை தினமும் இரவு தூங்குவதற்கு முன் முடியின் அடி வேரில் நன்றாக தடவி மறுநாள் தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

வேப்பிலை

வேப்பிலையில் உள்ள கசப்பு தன்மையாலேயே கிருமிகள் எங்கிருந்தாலும் அகன்றுவிடும். அந்த வகையில் பொடுகுத் தொல்லை இருந்தால் அதனைப் போக்குவதற்கு வேப்பிலையை அரைத்து அதனுடன் சிறு துளி எலுமிச்சைசாறு சேர்த்தும ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சை ஒரு நல்ல பொடுகை நீக்கும் பொருட்களில் ஒன்று. அதற்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றை விட்டு, முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 10-15 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் முடியை நீரில் அலச வேண்டும்.

ஆலிவ் ஆயில்

தினமும் இரவில் படுக்கும் முன், ஸ்கால்ப்பில் ஆலிவ் ஆயிலை தடவி, ஊற வைத்து, காலையில் எழுந்து குளித்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

தயிர்

தயிரில் எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு அலசுவதின் மூலம் தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

முட்டையின் வெள்ளை கரு

முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து பின் இவற்றுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து இந்த கலவையை முடியில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லை குறைய தொடங்கும்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...