பொடுகு பிரச்சனை ஏன் ஏற்படுகிறது? வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Report Print Jayapradha in நவீன அழகு

கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒருவித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும்.

குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே.

மேலும் ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

தலையில் பொடுகு ஏற்படுவதற்கான காரணங்கள்

 • தலை எண்ணெய் ஊற்று போல் சிலருக்கு இருக்கும். இதன் காரணமாக தலையில் பூஞ்ஞை பாதிப்பு ஏற்பட்டு பொடுகு பாதிப்பு ஏற்படலாம்.

 • உடலில் ஏற்படும் அலர்ஜி எக்ஸிமா, சோரியாஸிஸ் போன்ற காரணங்களால் தலையில் பொடுகு ஏற்படலாம்.

 • தவறான உணவுமு றை, மலச்சிக்கல், பலவீனம் இவைக ளால் பொடுகு ஏற்படும். பார்கின்ஸன்ஸ் வியாதி பொடுகை உண் டாக்கும். இதர நரம்பு மண்டல கோளாறுக ளும் காரணமாகலாம்.

 • எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது அல்லது அழுக்கு தலையுடன் இருப்பது போன்ற காரணங்களினால் பொடுகு ஏற்படும்

 • அதிகமாக இரசாயனம் கலந்த ஷாம்பு பயன்படுத்தினாலும் தலையில் பொடுகு வரலாம்.

 • மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள் இதனாலும் பொடுகு ஏற்படலாம்.

பொடுகு தொல்லை தீர்கக உதவும் இயற்கை வழிமுறைகள்

 • பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தல் நல்ல பயன் பெறலாம்.

 • தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம்.வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.

 • வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

 • வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்.தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து வந்தால் நல்ல பயன் பெறலாம்.

 • மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து தலையில் தேய்த்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

 • வேப்பிலை சிறிதளவும் அதனுடன் கொஞ்சம்மிளகையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கலாம்.

 • கற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

 • நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்வது நல்லது.

 • 3-5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயினை தடவி ஒரு மணி நேரம் சென்று நன்கு அலசி விடவும். இது பூஞ்ஞை கிருமிகளை நன்கு நீக்கும்.

 • அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers