உலக அழகி ஐஸ்வர்யா ராய் இவ்வளவு அழகாக தோன்ற இதுதான் காரணமாம்

Report Print Jayapradha in நவீன அழகு

அனைவருக்குமே அழகில் அதிக ஆர்வம் இருக்கும். அதிலும் உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யா ராயின் அழகின் இரகசியத்தை தெரிந்து கொள்ள ஆவலோடு இருப்போம்.

அவருடைய அழகின் இரகசியம் இயற்கை அழகுப் பொருட்கள் தான். மேலும் அவர் பயன்படுத்திய சில அழகுப் பொருட்களைப் பற்றி பார்ப்போம்.

இளமையுடன் இருக்க

ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் உடலில் உள்ள அனைத்து டாக்ஸின்களும் வெளியேறி, வயதானாலும் இளமையுடன் காட்சியளிக்கிறார்.

அழகின் இரகசியம்

அவரது அழகின் இரகசியத்திற்கு காரணம் ஒயின் ஃபேஷியல். இதை அடிக்கடி இவர் செய்வதால் தான், இவர் இவ்வளவு அழகாக உள்ளாராம்.

மின்னும் கண்கள்

தினமும் இரவில் போதிய தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தான் இவரது மின்னும் கண்ணின் இரகசியம்.

பட்டுப் போன்ற கூந்தல்

பட்டுப் போன்ற கூந்தலை ஐஸ்வர்யா பெறுவதற்கு அடிக்கடி தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வது தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

சருமத்தின் நிறத்தை பாதுகாக்க

கடலை மாவை பாலுடன் கலந்து ஃபேஸ் பேக் செய்வதால் சருமத்தின் நிறம் சற்று கூடும். மேலும் கடலை மாவு அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவர் அதனை அடிக்கடி பயன்படுத்துவராம்.

சுறுசுறுப்புடன் இருக்க

வெள்ளரிக்காயை வெட்டி சருமத்தில் சிறிது நேரம் வைத்தால் சருமம் ரிலாக்ஸ் ஆகிவிடும். மேலும் ஐஸ்வர்யா எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பதற்கு வெள்ளரிக்காய் காரணமாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு

இவர் உடலையும் மனதையும் சீரான முறையில் பராமரிக்க, யோகா செய்கிறார். மேலும் உடல் ஆரோக்கியத்திற்காக யோக பயிற்சியும் செய்கிறார்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers