முடி அடர்த்தியாக வளர விளக்கெண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

Report Print Jayapradha in நவீன அழகு

மஞ்சள் நிறமும் அடர்த்தியான எண்ணெய் தன்மையுடன் காணப்படும் விளக்கெண்ணெயில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

அத்தகைய விளக்கெண்ணெய் கொண்டு முடியைப் பராமரித்தால் அது முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

மேலும் முடிக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்கும் விளக்கெண்ணெயைக் கொண்டு முடியைப் பராமரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

முடியின் வளர்ச்சி

விளக்கெண்ணெயுடன் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக கலந்து, அதனை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து 3-8 மணிநேரம் ஊற வைத்து பின் அலச வேண்டும்.

இப்படி தொடர்ந்து மூன்று வாரம் முறை செய்து வந்தால் முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

முடி உதிர்வைப் போக்க

விளக்கெண்ணெய் முடி உதிர்தலைத் தடுக்கும் தன்மை கொண்டது. இதற்கு அதில் நிறைந்துள்ள சத்துக்கள் தான் காரணம்.

எனவே விளக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும்.

முடி வெடிப்பு

விளக்கெண்ணெயில் வைட்டமின் ஈ, ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது.

எனவே இந்த விளக்கெண்ணெயை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து வாரம் ஒருமுறை தலைக்கு நன்கு மசாஜ் செய்து குளித்து வந்தால் முடி வெடிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

பொடுகை ஒழிக்க

விளக்கெண்ணெயுடன் ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தால் பொடுகைத் தடுக்கலாம்.

முடி வறட்சி போக்க

முடி அதிக வறட்சியுடன் இருந்தால், வாரம் ஒரு முறை விளக்கெண்ணெய் மசாஜ் குளியல் எடுங்கள். இதனால் முடியின் வறட்சி தடுக்கப்படுவதோடு, அடர்த்தியும் அதிகமாகும்.மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...