அடர்த்தியான முடி வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

Report Print Jayapradha in நவீன அழகு

தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது, மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம் போன்றவை தான்.

அத்தகைய தலைமுடி உதிர்வைப் போக்க உதவும் விளக்கெண்ணெய் கொண்டு தாயரிக்கப்படும் ஹேர் மாஸ்க்கை தலைக்கு போட்டு வந்தால், தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்
 • விளக்கெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
 • தேன்- 2 டேபிள் ஸ்பூன்
 • முட்டை மஞ்சள் கரு- 1
செய்முறை
 • ஒரு பௌலில் விளக்கெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் தேன் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் சிறிதளவு முட்டை மஞ்சள் கரு ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
 • பின் அந்த கலவையை 1 மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர பொடுகு நீங்கும்.
 • மேலும் இதனை வாரத்திற்கு 2 முறை என 2 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், தலைமுடியின் அடர்த்தியில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணபீர்கள்.
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் விளக்கெண்ணெய் பயன்கள்
 • விளக்கெண்ணெயை தலைமுடிக்கு அடிக்கடிப் பயன்படுத்தி வந்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக பட்டுப் போன்று இருக்கும்.
 • விளக்கெண்ணெய் குடலில் உள்ள புழுக்களை அழிப்பதுடன், மலச்சிக்கலில் இருந்தும் விடுவிக்கிறது.
 • ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும்.
 • பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரியாகப் பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் இடலாம்.
 • உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக நடத்தி இரத்த அழுத்தம் வராமல் இருக்க செய்வதில் விளக்கெண்ணெய்க்கு நிகர் வேறு ஏதும் இல்லை.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்