உடல் கவர்ச்சிக்கு உயரம் ஒரு விஷயமில்லை!

Report Print Deepthi Deepthi in நவீன அழகு

உடல் கவர்ச்சிக்கு உயரம் ஒரு விஷயமில்லை. 6 அடி உயரம் உள்ள பெண்ணிற்கு உள்ள அதே கவர்ச்சி, 3 அடி உயரம் கொண்ட என்னைப் போன்றவர்களுக்கும் உண்டு.

இதனை வெளி உலகத்திற்கு காட்டவே எனது மாடலிங் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடுகிறேன்,” என்கிறார் 21 வயது மங்கையான துரு ப்ரெஸ்தா.

துருவின் உயரம் 3 அடி 4 இன்ச் மட்டுமே, ஆனால் மொடலிங் துறையில் இருப்பவர்கள் நல்ல கட்டுக்கோப்பாக உடலுடன் இருக்க வேண்டும் என்பதே வரையறை. அதனையே இன்று அனைத்து நிறுவனங்களும் பின்பற்றி வருகின்றன.

அமெரிக்காவை சேர்ந்த இவர், பிறவியிலேயே எலும்பு வளர்ச்சிக் குறைவு நோயால் பாதிக்கப்பட்ட காரணத்தால், குள்ளத்தன்மை நோயால் பாதிக்கப்பட்டார். வயதிற்கு ஏற்ற உயரத்தை, உடல்கட்டைப் பெற இயலவில்லை.

இதனாலேயே பல்வேறு கேலி, கிண்டல்களுக்கு ஆளானார். ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், எந்த உடல் அமைப்பை இந்த உலகம் கிண்டல் செய்ததோ, அதே தோற்றத்தை வைத்தே சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கின்றனர். “பேஷன் உலகத்தில் இருக்கும் அனைவரும் தாங்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். எல்லோரும் நடக்கும் பாதையில் அனைவரும் நடக்க வழி வேண்டும். அவர்கள் சக்கர நாற்காலியில் இருந்தாலும் சரி, ஊன்றுக்கோளில் இருந்தாலும் சரி.” என்றிகார் துரு.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers