வீடே சொந்தமா வாங்கலாம்! உலகின் விலை உயர்ந்த கைப்பையை பற்றி தெரியுமா?

Report Print Arbin Arbin in நவீன அழகு

உலகின் அதிக விலை கொண்ட கைப்பை வரிசையில் தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள கைப்பையின் விலை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள Hermes என்ற ஃபேஷன் ஆடம்பர பொருட்கள் உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்தியுள்ள 2014 Himalaya Birkin என்ற அரியவகை கைப்பையின் விலை தான் வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த 2014 Himalaya Birkin கைபையின் விலையானது சுமார் 279,000 பவுண்ட்ஸ் என கூறப்படுகிறது.

இந்த விலையில் பொதுவாக பிரித்தானியாவில் ஒரு வீட்டையே சொந்தமாக வாங்கி விடலாம். குறித்த தொகையை அளித்து நபர் ஒருவர் கடந்த ஆண்டு இந்த Himalaya Birkin கைப்பையை வாங்கியுள்ளார்.

இந்த அரியவகை கைப்பையானது 18 காரட் வெள்ளை தங்கத்தாலும் வைர கற்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த கைப்பை வரிசையில் Himalaya Birkin விலை அதிகம் என்றாலும், ஆடம்பர பொருட்களின் வரிசையில் இது புதிதல்ல என கூறப்படுகிறது.

மொனாக்கோ இளவரசி கிரேஸ் தொடங்கி, ஹாலிவுட் நட்சத்திரம் கெல்லியின் பெயரால் வெளிவந்துள்ள கைப்பை வரை அனைத்துமே மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலானவையே.

சாதாரணமாக கெல்லி அல்லது பர்கின் வகை கைப்பையின் துவக்க விலையானது 7,000 பவுண்ட்ஸ் என கூறப்படுகிறது.

ஆடம்பர கைப்பைகள் விற்பனையில் 46 சதவிகிதம் ஆசியாவிலும், 30% அமெரிக்காவிலும், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் 24 விழுக்காடும் நடைபெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்